பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு அவர்களை மீட்டுள்ளனர். பனியில் இருந்து மீட்கப்பட்ட இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர்கள் நீண்ட நேரம் பனியில் புதைந்து இருந்ததால் ஹைபோதெர்மியா என்ற பிரச்சினையும் ஏற்பட்டிருந்தது. உடனடியாக இருவரும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.