Categories
சினிமா தமிழ் சினிமா

அவருடன் பணிபுரிந்ததில் மிகவும் சந்தோஷம்…. வாழ்வின் மிகப்பெரிய சம்பவம் இதுதான்…. மனம் திறந்த ரித்விகா…!!

அறிமுக இயக்குனரான அரவிந்த்சாமி உருவாக்கத்தில் வெளிவரும் நவரசா திரைப்படத்தின் ஒரு பகுதியில் நடித்துள்ள அனுபவம் குறித்து ரித்விகா வெளியிட்டுள்ளார்.

மனித உணர்வுகளை வெளிக்கொணரும் விதமாக நவரசா என்ற  ஆந்தலாஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மனித உணர்வுகளான கோபம், கருணை, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, அருவருப்பு, மற்றும் ஆச்சரியம் போன்ற ஒன்பது வெவ்வேறு பிரமிப்பூட்டும் கதைகளை மையமாக வைத்து வெளிவர உள்ளது. இதன் ஒரு பகுதி அறிமுக இயக்குனரும்,  நடிகருமான அரவிந்த்சாமியின் இயக்கத்தில் “ரௌத்திரம்” என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இதில் தென்னிந்திய நடிகையும் பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா “அன்புக்கரசி” என்னும் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் அனுபவம் குறித்து ரித்விகா கூறியதில் “அரவிந்த்சாமி போன்ற பெரும்புகழ் பெற்ற நடிகருடன் ஒன்றாக பணிபுரிவது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய சம்பவம். மேலும் அவரை ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது கண்ணோட்டம் மற்றும் அதை உருவாக்கும் போது அவர் பயன்படுத்திய யுக்தியும் சுவாரஸ்யமானது” என்று கூறியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அன்று  190 நாடுகளில் ஓடிடிதளத்தில் வெளியாகவுள்ளது.

Categories

Tech |