ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி சுவாசிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அலெக்ஸியின் இரத்த மாதிரிகளை பரிசோதித்த ஜெர்மனி, ராணுவ பரிசோதனைக் கூடம் தயாரிக்கப்படும் ரஷ்ய தயாரிப்பான நோவிசாக் எனப்படும் விஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார். இவ்வகை நஞ்சு ரத்தத்தில் கலந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை எடுக்காத நிலையில் மரணத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஏற்கனவே அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதை பிரான்ஸ் மட்டும் ஸ்வீடன் நாட்டு மருத்துவ நிபுணர்கள் உறுதிப் படுத்தி இருந்த நிலையில் தற்போது ஜெர்மனியும் அதை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் ஜெர்மனியின் குற்றச்சாட்டுக்கு ரஷ்ய அதிபர் கருத்துக்கு விளாடிமர் புடின் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.