தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும்.
அதை இயற்கை முறைகள் கொண்டு எளிதாக நீக்கிவிடலாம்.
- தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
- வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி மறையும்.
- நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். பின்னர் அதனை எண்ணெயில் போட்டு அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.
- கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் முடியில் நல்ல மாற்றம் உண்டாகும்.
- தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலம் வெள்ளை முடி மறையும்.
- மென்மையான ஷாம்பூ, அமோனியா இல்லாத ஹேர் கலர்கள், இயற்கையாக கிடைக்கக்கூடிய ஹென்னா ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது இளநரைக்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன.
- இளநரைக்கு மருதாணி பூசுவது இயற்கை சாய முறை. மருதாணியுடன் கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். நரைமுடி நிறம் மாறிவிடும்.
- மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி, ஒரு கப் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்து காய வைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.