Categories
அரசியல்

கொரோனா தடுப்பு: கள் கொண்டு இயற்கை கிருமிநாசினி – தமிழக அரசுக்கு வேண்டுகோள்

கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார்

இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பனை மரத்திலிருந்து கள் இறக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த அத்தீவு  மக்கள் புளித்த கள்ளை முக்கிய பொருளாக பயன்படுத்தி கிருமிநாசினி தயார் செய்துள்ளனர். இயற்கையாக தயார் செய்யப்பட்ட இந்த கிருமி நாசினியை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக அண்டை நாடுகளிலிருந்து கையேந்தி கிருமிநாசினி பெறவேண்டிய நிலை இந்தோனேசியாவுக்கு ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பனைகளிலிருந்து பதநீர் இறக்கப்படுகிறது. பதநீர் கலயங்களை மாற்றி கள்ளை விரைவாக பெற இயலும். இந்த செயலுக்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு தொற்று பரவும் இந்த பேரிடர் நேரத்தில் தமிழ்நாடு அரசு கிருமி நாசினியை இயற்கையான முறையில் கள்ளிலிருந்து தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |