கொரோனா தொற்றை மூலிகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் தெரிவித்துள்ளார்
மடகாஸ்கர் தீவில் கொரோனா தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அந்த தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்னும் தாவரத்திலிருந்து மலேரியா நோய்க்கு மருந்து தயார் செய்யப்படுகின்றது. அதே மருந்து கொரோனா தொற்றையும் அளிக்க வல்லது என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார்.
இயற்கையாக தயாரிக்கப்படும் அந்த மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டு இருப்பதாக கூறிய அதிபர் மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் மருந்தினை தயார் செய்ததாக தெரிவித்ததோடு செய்தியாளர்கள் முன்னிலையில் மருந்தை குடித்து காட்டியுள்ளார். இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆன்ட்ரே வெளியிட்டுள்ளார்