தமிழக மக்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், நம் இனத்தில் ஒருவர் மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடைந்துவிட்டால் அவர் அடைந்த வெற்றியை நம் வீட்டில் ஒருவர் அடைந்த வெற்றியை போல் கொண்டாடி தீர்ப்போம். அந்த வகையில் தமிழகத்தின் தற்போதைய செல்லப் பிள்ளையாய் திகழ்ந்துவரும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது.
வலைப்பயிற்சியில் பந்துவீச சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் தற்போது பெற்றுள்ளார். தன்னம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா சென்ற நடராஜன்,
டிசம்பர் 2 2020 இல் ஒருநாள் போட்டியிலும், விடாமுயற்சியால் டிசம்பர் 4 2020 இல் டி20 போட்டியிலும், ஜனவரி 15 2021 இல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியுள்ளார். தமிழகத்தின் சிறிய மாவட்டத்திலிருந்து சென்று இத்தனை பெரிய சாதனை படைத்த நடராஜனுக்கு தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.