Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டாமை சரத்…. குழந்தை பிரபு… செல்லம் பிரகாஷ்ராஜ்…. 3 பேரை பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா ? 

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்,  இந்த விழாவின் நாயகன் யாரு? நம்ம தமன். அவரின் ஸ்டூடியோவிற்கு போனீர்கள் என்றால் பழங்களை வைத்துக் கூட ட்ரம்ஸ்தான் வாசித்துக் கொண்டிருப்பார். பாட்டு போட சொன்னா ஃபுல்லா பீட்ட போட்டு இருக்காருல்ல. இந்த படத்தினுடைய ஒரு அடித்தளமான பாடல் ஒன்று இருக்கின்றது. அதை நீங்கள் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள். அது அந்த அம்மா பாடல். அதுதான் இந்த படத்தினுடைய ஜீவன் என்று சொல்லுவேன்.

குறிப்பாக அந்த பாடலுக்கு என்னுடைய பாராட்டுகள். தமன் மற்றும் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். சரத்குமார் சாரின் உற்சாகம் எனர்ஜி இதெல்லாம் பார்க்கும்போது அவர் சரத்குமரன்தான். வாரிசு வீட்டிலையும், அவருடைய நாட்டாமை தான். ஜெயசுதா அம்மா இத்தனை வருஷம் கழித்து கூட அவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் கனெக்ட் ஆகின்றார்கள். இது சாதாரணமான விஷயம் அல்ல. அவங்க இருக்கிற இடமாக இருந்தாலும் சரி படமாக இருந்தாலும் சரி அது ஜெயம் தான். நன்றி அம்மா.

அடுத்ததாக பிரபு சார். அவர் எப்படி என்றால் பெரும்பாலான படங்களில் அவர் அப்பா. ஆனால் அவருடன் பழகி பார்த்தால் அவர் ஒரு குழந்தை. இவர பத்தி சொல்லனும்னா படத்தில் வில்லன் என்று சொன்னால் நமக்கு நிறைய பேர் ஞாபகம் வருவார்கள். ஆனால் செல்லம் அப்படின்னு சொன்னா இவர் பேரு மட்டும் தான் ஞாபகம் வரும். அது நம்ம முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜ் சார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த  படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றோம். சிவகாசி, போக்கிரி, கில்லி மாதிரி இதிலும் அந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகின்றேன் சார் என தெரிவித்தார்.

Categories

Tech |