உக்ரைன் மிதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்த கட்டுப்பாடு போடா உள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை ரஷ்ய வாங்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ரஷ்ய அரசுக்கு சொந்தமான நூத்தி இருபத்தி எட்டு எம்.பி.க்கள், நாற்பத்தி எட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அதிக அளவிலான ரஷ்ய நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிபதாக தெரிவித்துள்ளது.