Categories
தேசிய செய்திகள்

தேசிய தொழில்நுட்ப விருது…. தமிழகத்தைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு..!!

புதுமையான உள்நாட்டுத் தொழில் நுட்பங்களை விற்பனை செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என மூன்று பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது. சந்தையில் புதுமையை கொண்டுவரும் மற்றும் இந்தியா தொலைநோக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப குழுவினர் அங்கீகரிப்பதாக இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான விருது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்திற்கு வழங்கப்பட்டது. சிறு தொழில் பிரிவில் சென்னையை சேர்ந்த எஸ்பிபி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |