Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தேசிய கைத்தறி தினம்… அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி… தொடங்கி வைத்த ஆட்சியர்…

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில்  கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்தும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கௌரவிக்கும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம்அனுசரிகபட்டு வருகின்றது.

அதன்படி 7வது கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு 78,000 ரூபாயை ஆட்சியர் வழங்கியுள்ளார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், துணிநூல் உதவி இயக்குனர் வெற்றிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பானுகோபன், கூட்டுறவு சங்க நிர்வாக குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Categories

Tech |