அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இரண்டு விண்கலங்களை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுமார் 3750 கோடி நிதி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சுமார் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு, இத்திட்டங்கள் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இந்த திட்டங்களின் மூலமாக வெள்ளி எப்படி நரகத்தை போன்று ஒரு உலகமாக உள்ளது?. மேற்பரப்பில் ஈயம் உருக்கக்கூடிய திறன் எவ்வாறு வந்தது? மற்றும் கிரகத்தின் காற்று மண்டலம், பூகோளம் தொடர்புடைய அம்சங்கள் போன்றவை ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது இறுதியாக கடந்த 1990 ஆம் வருடத்தில், வெள்ளி கிரகம், மெகல்லன் ஆர்பிட்டர் மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. வெப்பநிலையில், சூரியனுக்கு அடுத்த இடத்தில் உள்ள கிரகம் வெள்ளி ஆகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 500 டிகிரி செல்சியஸ் உடையது. வரும் 2028-லிருந்து 2030 ஆம் வருடத்திற்குள் வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சிக்கான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.