Categories
உலக செய்திகள்

நாசாவின் பயிற்சிக்கு தேர்வான இளம்பெண்… விண்வெளிக்கு செல்லப்போகும் 3-ஆவது இந்தியப்பெண்…. யார் இவர்?..

கனடா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாசா விண்வெளி பயிற்சி திட்டத்தில் தேர்வாகியிருக்கிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஆதிரா ப்ரீத்தா ராணியை, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், பயிற்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறது. இவருக்கு பள்ளி பருவத்திலேயே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

தன் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்ட ஆதிரா படிக்கும் போதே பணியில் சேர்ந்தார். ரோபோடிக்ஸ் கல்வியை பயின்றார். எனினும் விமானியாக வேண்டும் என்ற தன் கனவிற்காக உழைக்க தொடங்கினார். தன் பயிற்சிக்காக பணத்தை சேமித்து வைக்க தொடங்கினார்.

அதன்பிறகு ரோபோடிக்ஸ் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று படிப்பை நிறைவு செய்தார். அதனைத்தொடர்ந்து திருமணம் செய்துகொண்டார். தன் கணவருடன் சேர்ந்து கனடா நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிகள் செய்ய தொடங்கினார்.

இந்நிலையில், தற்போது சர்வதேச விண்வெளி அறிவியல் நிறுவனத்தால் விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த பயிற்சியை அவர் நிறைவு செய்தால் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சைத் தொடர்ந்து மூன்றாம் இந்திய பெண்மணியாக விண்வெளிக்கு செல்வார்.

Categories

Tech |