முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம்.
பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘மார்ஸ்குவேக்’ என அழைக்கப்படும் இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதும் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10,11 ஆகிய தேதிகளிலும் இங்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும், இந்த நிலநடுக்கங்களின் தன்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருவதும், குறிப்பிடத்தக்கது.