ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புகைப்படம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
நாசா என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஜேம்ஸ் வெப் என்னும் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழன் புகைப்படம் இந்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதில், சில அம்சங்களை சிறப்பித்து காண்பிக்கக்கூடிய விதத்தில் டிஜிட்டல் முறை பயன்படுத்தி, வெளியிட்டிருக்கிறார்கள். இதில் பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் நிகழக்கூடிய அரோரா வியாழன் எனும் அரிதான நிகழ்வு, வியாழன் கோளிலும் ஏற்படுவது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.