நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது அவர்களின் அரசியல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளனர். அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து கடந்த 19ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து கொண்டுவருகிறார்.
இந்நிலையில் நாமக்கல்லில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அம்மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டி பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். பின்னர் அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி “முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல” என்று கூறினார்.