ராமநாதபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்முதலாக சானிடரி நாப்கின் எரிக்கும் மின்இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் பயிலுகின்றனர். இதனால் மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறது. இதற்குமுன் அதனை பயன்படுத்திய பின் அந்த நாப்கின்களை அளிப்பதற்கான சாதனங்கள் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் , அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , அதை பயன்படுத்துவதற்கான செயல்முறை குறித்தும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெண்கள் பயிலும் பள்ளியில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் பொருத்தப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.