Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானும் இதுபோன்ற ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன்”…. பாக்.அணிக்கு இம்ரான் கான் ஆறுதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு  அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே பாகிஸ்தான் அணி தோல்வி ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தாலும் இந்தத் தொடரில் பிரமாதமாக விளையாடியதற்காக தலைநிமிர்ந்து நடப்போம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,” பாபர் அசாம் மற்றும் அணி வீரர்கள் இப்போது நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது .கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற ஏமாற்றங்களை நானும் சந்தித்திருக்கிறேன்.ஆனால் நீங்கள் விளையாடிய தரமான கிரிக்கெட்டை  எண்ணி பெருமை படுங்கள் .அதுவும் வெற்றி பெறும் போது நீங்கள் காட்டிய தன்னடக்கத்தை நினைத்து பெருமைப் படுங்கள் “என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |