தன் மகன்களுடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறிய தாயார் கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த Wahyu Setyaning Budi என்பவர் தன் இரு மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான், செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை.
என்னுடைய இரு மகன்களும் பாலியல் தொடர்பில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்றவற்றை அவர்களுக்கு கற்பிக்கும் முயற்சிக்காக அவர்களுடன் இணைந்து படம் பார்க்கிறேன்’ என்று அவர் கூறினார். ஆனாலும் இவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.