நான்கு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது மர்ம நபர் ஒருவர் சுப்பையாவின் கைப்பையில் இருந்த நான்கு லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
மேலும் அந்தப் பணம் சுப்பையா நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சுப்பையா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.