நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அனுகீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், பிக் பாஸ் ஷிவானி மற்றும் சாந்தினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான “டிஎஸ்பி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், டிஃப்ரண்டான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மேலும் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியதாவது, நான் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க தயார். அவருடன் பிரண்டாக நடிக்கவும் சரி, வில்லனாக நடிக்கவும் சரி நான் ரெடியாக இருக்கிறேன். நாங்கள் போட்டி நடிகர்கள் இல்லை, எங்களுக்கிடையே இருப்பது ஆரோக்கியமான போட்டி தான்” என்று அவர் கூறியுள்ளார். இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அப்படியென்றால் இந்த பேட்டியில் கூறியது போல விஜய் சேதுபதியையும், சிவகார்த்திகேயனையும் திரையில் ஒன்றாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.