சந்தோஷ் ராஜா என்பவர் சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார்.
சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார்.
இதையடுத்து இவர் தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி அந்தப் பெண்ணிடம் ரூ.2,50,000 பெற்றுக் கொண்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அந்தப் பெண் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தன்னை சந்தோஷ் என்பவர் ஏமாற்றி பணம் பறித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை விசாரணை நடத்தி சந்தோஷ் ராஜா மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.