Categories
உலக செய்திகள்

“கடவுள் நம்பிக்கையில் தலையிடாதீர்கள்…. ட்விட்டரில் வந்த பதிவு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சவுதி மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளில் தலையிடுவதை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்துமாறு டுவிட்டரில் பதிவிட்ட ஏமன் நாட்டை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஏமன் நாட்டில் வசித்து வரும் அலி அபு என்பவர் ட்விட்டரில் சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதாவது டுவிட்டரில் சவுதி அரசாங்கம் அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளை சீண்டுவதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அலி அபு கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்த பதிவையும் ட்விட்டரில் போட்டுள்ளார். இந்நிலையில் அலி அபுவிற்கு நீதிமன்றம் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்ட குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |