Categories
இந்திய சினிமா சினிமா

நம் நாட்டில் அவதார்-2 திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்…. எதிர்பார்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியிருக்கும் “அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்” வருகிற 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 படம் வெளியாகவுள்ளது.

இப்போது டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் பல நாடுகளில் அவதார்-2 படத்துக்கான புரோமோஷன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவானது யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் 10 நொடிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையில் காட்சிகள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அவதார்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கிறது.

Categories

Tech |