பேருந்தில் நகை மற்றும் பணம் இருந்த பையை தவறவிட்ட பெண்ணிடம் அதை கண்டுபிடித்த காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நல்லகுறிச்சி பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் திருப்புவனம் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கும் போது தனது கையில் வைத்திருந்த பையை எடுக்கவில்லை.
அதன்பின் அந்தப் பையில் 500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் செயின் இருந்துள்ளது. இது தொடர்பாக சுகன்யா அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தை விரட்டி சென்று அதில் இருந்த பணம் மற்றும் நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.