Categories
சினிமா தமிழ் சினிமா

நகுலுக்கு பெண் குழந்தை… மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்…!


நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகியா நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை நகுல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

இந்நிலையில் ஸ்ருதி கர்ப்பமாக இருந்தார். இச்செய்தியை சில மாதங்களுக்கு முன்பு நகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் விரல்களை பிடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகுல் வெளியீட்டு ” எங்கள் வாழ்க்கையும் மேஜிக் ஆகிவிட்டது” என பதிவிட்டுள்ளார். நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |