கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஆம்பூரில் தினசரி 360 லிட்டர் கபசுர குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் தினசரி சுமார் 360 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு நகரப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் நேதாஜி ரோடு மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிரந்தரமாக “கபசுரக் குடிநீர் குடில்” அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த பகுதிக்கு வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அந்த பகுதியில் விநியோகம் செய்யப்பட்டு வந்த கபாசுர குடிநீரை பணியாளர்களிடம் இருந்து வாங்கி திரு. தங்கபாண்டியன் அருந்தினார். அப்போது நகராட்சி ஆணையாளர் த. சவுந்தரராஜன், தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.