அறங்காவலர்களை நியமித்த பிறகு நகைகளை உருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைகளை பிரிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோன்று நகைகளை உருக்குவதற்கும் எந்தத் தடை ஆணையும் இல்லை.
அறங்காவலர் நியமனத்திற்கு பின்னர் நகைகளை உருக்க வேண்டும் என்று தான் தீர்ப்பில் வந்திருக்கின்றது. இதை பொறுத்த அளவில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, அறங்காவலர் பணியாளர்களை நியமித்த பிறகுதான் உருக்குகின்ற பணியை மேற்கொள்வோம். எங்களைப் பொறுத்த அளவில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.