நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க கடந்த 31-ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரில் அவினாசிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மீண்டும் காரில் தாராபுரம் வந்துள்ளார். அப்போது சுரேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின் சுரேஷ் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுரேஷ் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.