Categories
உலக செய்திகள்

நடுவானில் குழந்தையை பெற்றெடுத்த…. 7 மாத கர்ப்பிணி பெண்…. ஜெர்மனியில் தரையிறங்கிய விமானம்….!!

லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம் கடந்த செவ்வாய் கிழமை அன்று 210 பயணிகளுடன் லண்டனில் இருந்து கேரளா மாநிலத்தின் கொச்சிக்கு புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணித்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக விமானத்தில் 2 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பயணித்து வந்துள்ளனர். இதனால் மருத்துவர்களின் உதவியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண் அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்டுக்கு அருகே உள்ள விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பிராங்பர்ட் விமான நிலையத்தில் அந்த பெண், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிகிச்சை பெறுவதற்காக விமானத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்கள். இதன் பின் ஏர் இந்தியா விமானமானது பிராங்பர்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

Categories

Tech |