Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

 ஐரோப்பாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மீண்டும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவி மக்களை அச்சுறுத்தியது.அதேபோல் ஐரோப்பாவிலும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா  பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மக்கள் அனைவருக்கும் அஸ்ட்ராஜெனேகா  என்ற தடுப்பூசியும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா 2 என்ற அலை பரவி வருவதாக சில நாடுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இங்கிலாந்து நாட்டில் மரபணு மாற்றமடைந்த வைரஸ் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் கொண்ட புதிய வைரஸ் ஐரோப்பியாவில் பரவியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசால்  பிரான்ஸ் இத்தாலி ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆகையால் மீண்டும் வேகமாக பரவி வரும் வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையிலும் பாதிப்பு ஏற்படுவதால் பொது முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ச்  உள்ள 15 நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டது .பாரிசில் அத்தியாவசியம் இல்லாத கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு மூட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.போலந்து  நாடு முழுவதும் பொது முடக்கம் விதிக்கப்பட்டதுடன் அடுத்த மூன்று வாரங்களுக்கு ஓட்டல்கள் கடைகள் மட்டும் தியேட்டர்களுக்கு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உக்ரைன் நாட்டிலும் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் புதிய முறையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன மக்களின் அத்தியாவசியம் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உலக அளவில் புதியதாக உருவான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

Categories

Tech |