நாடு முழுவதும் புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கும் அனைவருக்கும் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்தார். பழைய வாகனங்களை தாமாகவே முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை 2021 -2022 புதிய ஆண்டில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய கொள்கையில் சொந்த பயன்பாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளவை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுப் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த புதிய வாகன கொள்கையில் நான்கு வகையான முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு பசுமை வரி மற்றும் பல வரிகள் விதிக்கப்பட அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. புதிய வாகன கொள்கையில் மாசு கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றுதல் பெறுவதற்கான அனைத்தும் தானாகவே செயல்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் வாகன தகுதி சான்றிதழ் நாடு முழுவதும் வழங்கும் அனைத்து மையங்களிலும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர் . இந்த மையங்கள் அனைத்தும் அரசு-தனியார் பங்களிப்பு (பிபிபி ) முறையில அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி சோதனையில் தேர்ச்சி பெற தவறும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் புதிய வாகன கொள்கையில் கூறப்பட்டுள்ளது என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்