ஸ்காட்லாந்தில் நடுரோட்டில் ஒரு பெண் ஒரு ஆணின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க்ல் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியது. 2019ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்கன்சி என்ற நபருக்கும் பெத்தானியா என்ற பெண்ணுக்கும் இடையே நடுரோட்டில் சண்டை ஏற்பட்டது. பெத்தானியா மெக்கன்சியின் நாக்கை கடித்து வெளியே துப்பியுள்ளார். இந்த சம்பவம் இதோடு முடிவடையவில்லை. மெக்கன்சி மேலும் அதிர்ச்சியும் காத்திருந்தது. சண்டையின்போது கடித்த துண்டு தோராயமாக இரண்டு சென்டி மீட்டர் முதல் மூன்று சென்டிமீட்டர் அளவு இருந்தது.
இதனால் சாலையில் கிடந்த அந்த நாகை அங்கு பறந்த கடல் பறவை ஒன்று எடுத்துச் சென்றுவிட்டது. பின்னர் இந்த வழக்கு எடின்பர்க் ஷரிப் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மெக்கன்சியின் நாக்கை கடித்ததை பெத்தானியா ஒப்புக்கொண்டார். நாக்கின் ஒருபகுதி கடுமையாக காயப்படுத்தியதற்கும், நிரந்தர சிதைவை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கியதையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மெக்கன்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது நாக்கில் ஏற்பட்ட சிதைவால் தொடர்ந்து ரத்தம் வெளியேறியது. நாவின் துண்டு கண்டுபிடிக்கப்படாததால் அவரது நாக்கு மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.