Categories
உலக செய்திகள்

நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வார் …. வழக்கறிஞர் பரபரப்பு வாதம் ….!!!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு  நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் .

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின்  வேண்டுகோளின் படி அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார் . கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் இவரை  இந்தியாவிற்கு  நாடு கடத்த  மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி  உத்தரவிட்டார். இதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி  பிரீதி படேல் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கக் கோரி லண்டன்      உயர்  நீதிமன்றத்தில் நீரவ் மோடி தரப்பில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி  மார்ட்டின் சாம்பர்லைன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீரவ் மோடி சார்பில் அவருடைய  வழக்கறிஞர் எட்வர்டு பிட்ஜெரால்டு கூறும்போது,” தற்போது நீரவ் மோடி  மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ,அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மனநல நிபுணர் அளித்த சான்றிதழை கொடுத்துள்ளார். மேலும் அவரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ள மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த காரணங்களால் இவரை  நாடு கடத்தக் கூடாது “என்று அவர் கூறினார்.

Categories

Tech |