நடிகர் விஜய் கே ஜி எஃப் படத்தின் இயக்குனரை சந்தித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் கே ஜி எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீலை சில மாதங்களுக்கு முன்பு விஜய் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சிலர் கே ஜி எஃப் போன்ற படங்களில் விஜய்க்கு நடிப்பதற்கு பல நாட்களாக ஆர்வம் இருப்பதாகவும் இதனால் தான் இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் சிலர் எதார்த்தமாக தான் இவர்கள் இருவரும் சந்தித்ததாக கூடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பிரசாந்த் நீல் மற்றும் விஜய் இருவரும் சந்திப்பு பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.