Categories
சினிமா

அடடே….!! லிங்குசாமி படத்தில் சிம்பு பாடிய காதல் பாடல்….!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி  வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி  வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இப்படத்தின் பாடகராக இணைந்து உள்ளாராம். சென்னையில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் காதல் பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேலும் டி.எஸ்.பி இசையில் முதல் முறையாக சிம்பு பாடியுள்ளார். எனவே இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆறு நாட்களில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |