Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என்பது குறித்து நடிகர்கள் விஷால் தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், தொழில் முறை அல்லாத 60 உறுப்பினர்களை தவிர்த்து மற்ற வாக்குகளை எண்ணி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இந்த சட்ட போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மரு தேர்தல் நடத்துவதாக இருந்தால் மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

அப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ள நிலையில் மறுதேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விஷால் தரப்பினர் வலியுறுத்தினர். இதற்கு ஏழுமலை தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Categories

Tech |