தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கும் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
முதலாவதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலை அணுகி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் விஷாலுக்கு முன்பே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கவேண்டி இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆகவே விஷாலுக்கு பதில் அர்ஜுனை தேர்வு செய்து உள்ளனர். அவ்வாறு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு ரூபாய்.4 கோடி சம்பளம் பேசியிருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.