Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு படத்தினால் தான் சினிமா விட்டு விலகினேன்…. ஷாக் கொடுத்த பிரபல நடிகை…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

நடிகை லோகா வாஷிங்டன் சிம்பு படத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களால் சினிமா விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்ட நிலையில் மாநாடு திரைப்படம் இவருக்கு கை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் இவர் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கெட்டவன். இப்படத்தின் கதாநாயகியாக லேக்கா வாஷிங்டன் ஒப்பந்தமானார். இவர் தமிழில் வினை நடிப்பில் வெளியான ஜெயம்கொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் கெட்டவன் படத்தில் நடிப்பதற்கு சில காரணங்களால் கைவிடப்பட்டது. எனவே அப்படத்தில் நடித்த சில கசப்பான அனுபவங்களினாலே தான் சினிமாவை விட்டு விலகியதாக அவர் தெரிவித்துள்ளார். லேக்கா வாஷிங்டன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு மும்பையில் சிற்பக்கலை கலைஞராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

Categories

Tech |