Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… படத்தில் வில்லனாக நடிக்கப்போவது இவரா ?…!!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்; எனது பேச்சு திரித்து பரப்பப்படுகிறது…

தேர்தலுக்குப் பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Categories

Tech |