நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகின்றார். இதனால் அவர் படத்தின் ஹீரோவுக்கு அவரே டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கிறார் என்றும், இது வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷன் என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கின்றனர். அதோடு சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்து வரும் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் தரப்பில் கூறியிருப்பதாவது,’ நடிகர் சிம்புவின் திறமைக்கு எத்தனை டாக்டர் பட்டம் வேண்டுமானாலும்அவருக்கு கொடுக்கலாம் .இது அவருடைய திறமைக்கு கிடைத்தது என்றும், காசு கொடுத்து வாங்கியது இல்லை என்றும் படத்தை விளம்பரம் செய்ய டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ‘என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒருபக்கம் விமர்சனங்கள் இருந்தாலும் மறுபக்கம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் சிம்புவின் கேரியர் காலி என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் மாநாடு திரைப்பட வெற்றியின் மூலம் அவருடைய கெரியர் புத்துயிர் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.