Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா ‘. இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள் . மேலும் ஹர்பஜன் சிங் ,யோகி பாபு, முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சாரா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

டிக்கிலோனா பட போஸ்டர்

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நாளை இந்தப் படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

Categories

Tech |