நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .
பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். தமிழில் ‘அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ஜேஜே பெடரிக் இயக்குகிறார் . இதையடுத்து அந்தகன் படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் . நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .