நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் . இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டது. இறுதியில் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது. இந்நிலையில் ஜனவரி 8ஆம் தேதியான இன்று மாறா படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.