நடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றவர் ஆரி. 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவுடன் பங்கேற்று டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் , திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளம் மூலம் நன்றியை தெரிவித்து வருகிறார் .
அன்பார்ந்த கமல் Sirக்கு @ikamalhaasan உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Aari Arujunan (@Aariarujunan) January 20, 2021
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் ஓய்வு பெற்று வருகிறார் . இதுகுறித்து நடிகர் ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அன்பார்ந்த கமல் சார்க்கு.. உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் ,சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.