நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி ‘படத்தின் தமிழன் என்று சொல்லடா பாடல் புரோமோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் தயாராகியுள்ளது. இது ஜெயம் ரவியின் 25வது திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பூமி படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்தது .
#Bhoomi is for everyone in the family 😇
Streaming on @DisneyplusHSVIP from January 14!
#BhoomiIn4Days@immancomposer @dirlakshman @AgerwalNidhhi @theHMMofficial @onlynikil pic.twitter.com/P3FNNqN7LM— Jayam Ravi (@actor_jayamravi) January 10, 2021
இந்த படம் தயாராகி கடந்த வருடம் மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான தமிழன் என்று சொல்லடா பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.