Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் உணர்ச்சிகரமான காட்சி வெளியீடு…!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள பூமி படத்தின் உணர்ச்சிகரமான முக்கிய காட்சி வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் தயாராகியுள்ளது. இது ஜெயம் ரவியின் 25வது திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் .  டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பூமி படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்தது . இந்த படம் தயாராகி கடந்த வருடம் மே மாதம் வெளியாக இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போதுஇந்த படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் ‘பூமி’ படத்தின் உணர்ச்சிகரமான முக்கிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது . ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ‌.

Categories

Tech |