நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் . இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் .
So glad to have met you and worked with you, my fellow leo co-actor! 🦁 Will miss your infectious laughter, learning so much from you everyday and our mutual love for ‘maggi’ 😋 @dhanushkraja
Had a blast of a first schedule, and can’t wait to start the second one soon! 🎬 #D43 pic.twitter.com/ayEMCFdTLj
— Malavika Mohanan (@MalavikaM_) February 7, 2021
இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது . தற்போது நடிகை மாளவிகா மோகனன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் தனுஷுடன் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .