Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சியான் விக்ரமின் ‘கோப்ரா’… படத்தின் அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா ‘படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படம் தயாராகியுள்ளது . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்  . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் இசையில் ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது ‌.

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ஜனவரி 9ஆம் தேதி படத்தின் டீசரை ஏ ஆர் ரகுமான் வெளியிடுவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது . இந்நிலையில் கோப்ரா படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த படத்தில் நடிகர் விக்ரம் கணிதக் கோட்பாடுகளை பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்துள்ளார் . இர்பான் பதான் வில்லனாக மிரட்டியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .

Categories

Tech |