நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
சின்னத்திரையில் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன் . இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . இவர் நடிப்பில் அதிகாரம் 79, ஓர் இரவு ஆகிய படங்கள் வெளியானது. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .
மேலும் இவர் நடிகர் வைபவ் உடன் இணைந்து நடித்த ‘லாக்கப்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகை வாணி போஜன் சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.